பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும் ஒரு அங்கமாக முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி(M.W.R.A.F.) டயக்கோனியா அணுசரனையில் இடம்பெற்ற தையல் பயிற்சி முதற்கட்ட நிறைவும் கண்காட்சி மற்றும் விற்பனையும் கல்முனை மருதமுனை காரியாலயத்தில் நேற்று (23) நடைபெற்றது.
இந்நிகழ்வில் 3 மாதங்களாக இடம்பெற்ற பயிற்சி நெறியில் வாழ்வாதாரம் மேம்படுத்தல் உதவி வழங்கப்பட்ட பெண்களின் உற்பத்தி பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திருமதி யு.எல் ஹபீலா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வு அதிதிகளாக சிரேஸ்ட சட்டத்தரணியும் கல்முனை காதி நீதிபதியுமான எம்.டபிள்யு.ஆர்.ஏ.எப். இன் சட்ட ஆலோசகருமான எப்.எம்.ஏ அன்சார் மௌலானா விரிவுரையாளரும் மருதமுனை ஜம்மியதுல் உலமா சபை தலைவருமான அமீருள் அன்சார் மௌலானா (நளீமி) மற்றும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளுக்கான இணைப்பாளர் ஐ.எல்.எம் இர்பான் பயிற்சி ஆசிரியை ஜெமினா பர்வீன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment