கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் சஹீலா இஸ்ஸதின் பொறுப்பேற்றார்.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இன்று (11.12.2023) டாக்டர் சஹீலா இஸ்ஸதின் கடமையேற்றுக் கொண்டார்.

சாய்ந்தமருதை சேர்ந்த இவர் முதலாவது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்ற பெண் அதிகாரியாவார். மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தரும் ஆவார்.

சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், ஓய்வுபெற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஏ. இஸ்ஸதீன் அவர்களின் மனைவியும் ஆவார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் தள வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது பதவி ஏற்பு நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :