மஹியங்கன மகாவலி கங்கை பிரதேசத்திலிருந்து பகலிலும் இரவிலும் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மஹியங்கன தேசிய பாடசாலை மற்றும் சித்தாத்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் பிரதான நுழைவாயில் மதில்கள் உடைக்கப்பட்டு அழகுக்காக பாடசாலை சூழலில் நடப்பட்டுள்ள மரங்களும் பூச்சட்டிகளும் மிகவும் மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இச் செயற்பாடுகள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ கல்வித் திணைக்களமோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமலிருப்பது மிகவும் கவலையளிப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தமது பிள்ளைகளை காலை வேளையில் உணவு பார்சல்களோடு பாடசாலைக்கு அனுப்புவதில் பலவிதமான சிக்கல் தோன்றியுள்ளதுடன், பாடசாலைக்கு வேளைக்கு செல்வதிலும் பிள்ளைகள் தயக்கம் காட்டி வருவதாக பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment