நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்த முப்பெரு விழா நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது 2023 ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் செயலாளர் வீ.ரி.ஹனூன் தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கிராஅத் ஓதலுடன் ஆரம்பமானது.தொடர்ந்து வரவேற்புரை மற்றும் விருந்தினர் உரைகள் இடையிடையே இடம்பெற்றன.அத்துடன் மாணவர்களது கலை நிகழ்வுகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்,இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை சாலை முகாமையாளர் ஜவ்பர், ஒய்வு பெற்ற அதிபர் ஏ.ஏ.கபூர், ஒய்வு பெற்ற ஆசிரியர் யூ.எல்.ஏ.கபூர், அதிபர்களான எம்.எல்.பதியுதீன், சி.எம்.நஜீப், திருமதி ஏ.எம்.முனாஸிர் உட்பட மேலும் பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிய பொருளாளர் ஏ.எல் ஜலில் நன்றியுரை நிகழ்த்தியதுடன் ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment