“அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க வாழ்க்கைச் செலவு குழுவொன்றை அமைக்க வேண்டும்” – ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!



ஊடகப்பிரிவு-
வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் கஷ்டப்படுவதாகவும், பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை நேற்று செவ்வாய்க்கிழமை (19) பார்வையிட சென்றிருந்த போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. சந்தையில் அரிசி, மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.

நல்லாட்சிக் காலத்தில் நான் வர்த்தக அமைச்சராக இருந்த போது, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாராவாரம் எம்மைச் சந்தித்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் ஏற்ற இறக்கம் தொடர்பில் கலந்தாலோசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், தற்போது அப்படியொரு நடைமுறை இருப்பதாகத் தெரியவில்லை. இப்பொழுது அவர் ஜனாதிபதி என்பதால் வேலைப்பளு அதிகரித்துவிட்டதோ என்னவோ. எவ்வாறாயினும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள். இது தொடர்பில் வர்த்தக அமைச்சரோடு பேசி, வாழ்க்கைச் செலவுக் குழு ஒன்றை நியமித்து, அரிசி, மரக்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களையாவது மக்களுக்கு சாதாரண விலைகளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார்.

இதேவேளை, முட்டை இறக்குமதி தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்,

“முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன். நாட்டில் இவ்வளவு காலமும் இடம்பெறாத ஒரு வேலைத்திட்டமே இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோன்று, முட்டை உற்பத்தியாளர்களும் முட்டையை சாதாரண விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :