மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் 2002 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் அமைப்பான மனாரியன்ஸ் பேர்ள் அமைப்பினரினால் தமது வகுப்பு நண்பரான மர்ஹூம் எம்.ஐ.ஏ. ரணீப் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட கார்டன் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.ஏ.சி.பைசுல்ஹை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஐ.உபைதுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாடசாலையின் பிரதான நுழைவாயில் வரவேற்பு அருகில் சுமார் மூன்றரை லட்சம் ரூபா செலவில் இந்த கார்டன் அமைக்கப்பட்டதோடு மனாரியன்ஸ் பேர்ள்ஸ் அமைப்பின் பெண் அங்கத்தவர்களால் பாடசாலைக்கு தேவையான பசுமை மற்றும் அழகை பேணும் மரங்களும் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெண்கள் பிரிவு பொறுப்பதிபர் எம்.எம்.அனஸ், பிரதி அதிபர்களான எம்.சி.நஸார், ஹஸ்மி மூஸா, மனாரியன்ஸ் பேர்ள்ஸ் அமைப்பின் உறுப்பினர்களான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மர்ஹூம் எம்.ஐ.ஏ. றணீப் அவர்களின் தாய் திருமதி நுஸ்றா ஆசிரியை, தந்தை முகம்மட் இஸ்மாயில் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளை அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.எஸ்.எம்.நிஸாம் ஆசிரியர் நெறிப்படுத்தினார்.
0 comments :
Post a Comment