கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 2024.01.14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, இவ் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்க புதிய அங்கத்தவர் பதிவுகள் எதிர்வரும் 31.12.2023 உடன் முடிவுறுத்தப்படவுள்ளதோடு, மீண்டும் புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் பணி ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிராத பழைய மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து, விரைவில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment