நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு என்பன தொடர்பாக விவாதம் நடைபெற்றது. சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் மட்டக்களப்பை சேர்ந்த ஒரு இளைஞனை கோவிலில் ஒரு மணியும், விளக்கும், சாம்பிராணி தட்டும் களவாடிய குற்றத்திற்காக சிறையில் வைத்து கிரிக்கட் விக்கெட்இனால் அடித்துக் கொன்றார்கள். தொடர்ச்சியாக பொலிசாரினால் இவ்வாறான கைதுகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையிலும் நடராஜா அலெக்ஸ் எனும் 25 வயதுடைய இளைஞர் பொலிசாரினால் கொல்லப்பட்டுள்ளார். இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பிலும் கூட கொக்குவிலைச் சேர்ந்த தர்சாத் என்ற சிறுவன் சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் இருந்த போதே கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல அராஜகங்கள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். கோடிக்கணக்கில் நாட்டின் பணத்தினைக் கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக இன்னும் முறையான சட்டம் அமுல்ப்படுத்தப்படவுமில்லை அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு முறையான தண்டனைகள் வழங்கப்படவுமில்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment