சுனாமியால் உயிரிழந்த பொதுமக்களுக்காக துஆ பிரார்த்தனை செய்த மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் : மேலதிக அரசாங்க அதிபர் உட்பட அரச அதிகாரிகள் பங்கேற்பு !



நூருல் ஹுதா உமர்-
சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களுக்காக மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் 19 வது வருடமாகவும் ஏற்பாடு செய்த துஆ பிராத்தனையும், நினைவுரையும், குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் சுனாமி தினமான இன்று (26) மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஏ. பௌசர் அவர்களின் வழிகாட்டலில் உப தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) தலைமையிலான உலமாக்கள், மதரஸா மாணவர்கள் கலந்து கொண்டு துஆ பிரார்த்தனை, நினைவுரை, குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வு ஆகியவற்றை மேற்கொண்டனர்.

மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் உப செயலாளர் யூ.எல்.என் ஹுதா நெறிப்படுத்திய இந்நிகழ்வில் உலமாக்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை செயலாளர் ஏ.சுந்தரகுமார், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ஓய்வுபெற்ற அதிபர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம் உட்பட கல்விமான்கள், மதரஸத்துல் இர்ஸாதிய்யா மாணவர்கள், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எப்.எம். ரௌபி, பொருளாளர் ஏ.எல்.எம். றிபாஸ், ஆலோசகர் ஐ. இஸ்திகார் உட்பட நம்பிக்கையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து மதரஸத்துல் இர்ஸாதிய்யா மற்றும் கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய மாணவர்கள் அடங்களாக 204 பேர் கடந்த சுனாமி பேரலையில் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :