"ட்ரோன்' தொழில்நுட்பம் மூலம் பீடைநாசினி வீசும் முறை அம்பாறையில் அறிமுகம்! விவசாய துறையில் புதிய பரிமாணம்!



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் "ட்ரோன்" தொழில்நுட்பம் மூலம் பீடை நாசினி வீசுகின்ற புதிய நடைமுறை அம்பாறையில் அறிமுகமாகிறது.

அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் இது தொடர்பான விளக்க செயல் முறைப் பயிற்சியை நேற்று(30) அம்பாறையில் நடத்தியது .

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச விவசாய போதனாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

விவசாய திணைக்கள பொறியியலாளர் இதற்கான விளக்கத்தையும் செயல்முறை பயிற்சியையும் அங்கு வழங்கினார்.

ஒரு ஏக்கர் வயல் நிலத்திற்கு பீடை நாசினி வீசுவதற்கு நான்கு நிமிடங்களை போதுமானது என்பதனை இதன் மூலம் அறிய முடிந்தது.

இவ்வாறான விளக்க செயன்முறை பயிற்சிகளை விவசாயிகள் மத்தியிலும் பிரதேச ரீதியாக முன் கொண்டு செல்லப்பட இருக்கிறது.

இப் புதிய தொழில்நுட்ப முறை வேளாண்மை வயலுக்கு மாத்திரமல்லாமல் கரும்பு சோளம் போன்ற பயிர்செய்கைகளுக்கும் பயன் படுத்தமுடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :