கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை புரிந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் பிரதி அதிபர் எம்.ஆர்.எம். நௌஸாட் அவர்களின் நெறிப்படுத்தலில், தரம் -11 பகுதித் தலைவர் ஸி. இஸாம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை பிரதி,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment