கரபிஞ்சாவில் அபிராமி அறநெறி பாடசாலை இகிமி சுவாமி நீலமாதவானந்தா ஜீயால் திறந்து வைப்பு!



வி.ரி.சகாதேவராஜா-
ராமகிருஷ்ண மிஷன் தன்னுடைய புதிய சேவை நிலையத்தை நுவரெலிய மாவட்டம் கொட்டகலையில் அமைத்து வருகிறது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் இரத்தினபுரிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்து 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்று இந்து தர்மத்தின் வழிபாட்டு முறைகளை விரிவாக எடுத்துரைத்து சொற்பொழிவாற்றினார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கரபிஞ்ச கிராமத்தில் அபிராமி அறநெறி பாடசாலையை திரை நீக்கம் செய்து தொடங்கி வைத்ததோடு அங்குள்ள கிராம மக்களுக்கு தர்மத்தின் வழியில் வாழ்தல் என்னும் தொனி பொருளில் உரையாற்றினார்.

இரத்தினபுரி மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ ரத்தினபுரீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்து ஸ்வயம் சேவக குழுவினரின் பெண்களுக்கான முகாமில் கலந்து கொண்டு, யுவதிகளை சமுதாயத்தின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது என்ற பொருளில் உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :