இரத்மலான செவிப்புலனற்றோர் பாடசாலை , இரத்மலான கண்பார்வையற்றோர் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணம் செவிப்புலனற்றோர் மற்றும் கண் பார்வையற்றோர் பாடசாலைகளுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ஓவியக் கண்காட்சி அண்மையில் கொழும்பு ஹோட்டன் பிளேஸ்,ஜே.டீ.ஏ.பெரேரா கலரியில் இடம்பெற்றது. .
செவிப்புலனற்றோர் மற்றும் கண் பார்வையற்றோர் சமூகத்தின் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவர்கள்.
அவர்களிடமும் சாதாரண மனிதர்களிடம் இருக்கும் ஆசா பாசங்களும், திறமைகளும் அவர்களிடையேயும் காணப்படும். அவர்களிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர சந்தப்பம் வழங்கினால் அவர்கள் ஆச்சரியப்படத் தக்க வகையில் அசத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
இக் கண்காடசியனை பார்வையிட்டு இவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்த நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment