காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மாநாட்டில் இலங்கை இளைஞர்களின் பிரதிநிதியாக ஹஸீப் மரிக்கார்.



அஸீம் கிலாப்தீன்-
காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 28ஆவது மாநாடு (COP28) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இலங்கை நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாநாட்டில் பல்வேறுபட்ட நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் மற்றும் சுற்றாடற்றுறை அமைச்சர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர். இந்த மாநாட்டில் உலகளவில் பாரிய சவாலாக இருக்கின்ற காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட இருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :