2023 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்த மாணவர்களை வாழ்த்தி, கெளரவிக்கும் வகையில் குருநாகல் வலயக்கல்வி பிரிவின், பறகஹதெனிய மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையின்) பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு நிகழ்வொன்று அண்மையில் அதிபர் ஐ. அப்துல் ரஹ்மான் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதன் போது பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குறித்த வகுப்பிற்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குருநாகல் வலயக்கல்வி பிரிவின் உதவிக்கல்வி பணிப்பாளர் சலாஹூதீன், கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயளாலர் நவாஸ் சாலி கண்டி மாவட்டத்தின் குருந்துகொல்ல மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.ஏ.எம். ஃபவுசான் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் பல்வேறு பணிகளிலும் அணுசரனையாளர்களாக பங்களிப்பு செய்து வருகின்ற நலன்விரும்பிகளுடன் பழைய மாணவர் சங்கத்தின், உப தலைவர் எஸ்.ஏ.எம். ஸஹீட், செயலாளர் ஃபாஹிம் அமானுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும் தற்போது தரம் நான்கில் கற்கும், மாணவர்களை ஊக்கமளித்து, உட்சாகப்படுத்தும் வகையில் குறித்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
0 comments :
Post a Comment