எம்.எம்.றம்ஸீன்-
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ஜனாஸாவாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment