ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் ஐம் பெரும் விழா!



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரின் அப்துல் மஜீத் ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் ஐம் பெரும் விழா கல்லூரியின் அதிபர் மௌலவி அல் ஆலிம் U.A.முனாப் மன்பஈ BA அவர்களின் தலைமையில் அலிகார் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

4வது மௌலவி அல் ஆலிம் பட்டமளிப்பு விழா 5வது தலைப்பாகை சூட்டி கௌரவிக்கும் விழா சுந்தர நபிகளாரின் சந்தனப்புகழ் மணக்கும் மீலாதுன் நபி விழா வலிகல் திலகம் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் மனாகிப் மற்றும் ஹஸனிய்யாவின் 3வது மலர் வெளியீட்டு விழா என ஐம் பெரும் விழா சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சங்கைக்குரிய ஷரீப் அலி ஹஸனுல் அன்வர் மௌலானா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் MS சுபைர் BA உட்பட உள்ளூர் வெளியூர் உலமாக்கள் கல்விமான்கள் கௌரவ அதிதியாகவும் அத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தர். நிகழ்வில் மௌலவி அல் ஆலிம் பட்டம் பெற்ற மீராவோடையைச் சேர்ந்த அல்ஹாபிழ் AM.ஆஸிப் அல்ஹாபிழ் AM.அஸாதிக் ஏறாவூரைச் சேர்ந்த அல்ஹாபிழ் AC .பால் அஹ்மத் மற்றும் தலைப்பாகை சூட்டி கௌரவிக்கப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த அல்ஹாபிழ் ALM அக்ரம் , RM.ருஷைத் சுங்காவிலயைச் சேர்ந்த ILM.நபராத் KM சஜீத் அத்துடன் கல்லூரியின் அதிபர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் அதிதிகளினால் மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்களுக்கான விருதுகளும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கொழும்பு அஜ்வாதுல் பாஸி அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி அல் ஆலிமுல் பாழில் AC பஸால் அஹ்மத்

அஹ்மத் ஸூபி மஹ்ழரி அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது அத்துடன் 1500பேருக்கான அன்னதானமும் வழங்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :