1. அரபு மதுரசா மற்றும் ஹிப்ழ் மத்ரசாவில் சேர்க்கப்படும் மாணவர் கட்டாயம் ஆண்டு 9 சித்தியடைந்திருக்க வேண்டும்.
2. முஸ்லிம்கள் 50 வீதத்துக்கு மேல் வாழும் ஒவ்வொரு ஊரிலும் முடிந்தளவு ஒரு அரபு மதுரசாவேனும் இருக்க வேண்டும்.
இங்கு 16 வயதுக்கு மேற்பட்ட உயர்தர மாணவர்களுக்கு மட்டுமே ஹொஸ்டல் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
அனாதை பிள்ளைகளுக்கு வயது வித்தியாசம் இன்றி ஹொஸ்டல் அளிக்கலாம்.
அவர்களுக்கு பெற்றோர் இல்லை என்பதால் ஹொஸ்டல் அவசியமாகும்.
3. மதுரசாவின் 1ம் ஆண்டில் அரபு பாசை, மட்டுமே கற்பிக்க வேண்டும்.
2, 3, ம் ஆண்டில் ஏனைய சமய பாடங்களை அரபியிலும் ஜி சி ஈ சாதாரண தரத்துக்குரிய பாடங்களையும் கற்பிக்க வேண்டும்.
4, 5ம் ஆண்டுகளிலும் அவ்வாறே கற்பிக்கப்படுவதுடன் ஜி சி ஈ உயர்தரத்துக்கும் தயார் படுத்துவதுடன் ஆங்கில மொழி பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.
அல் ஆலிம் பரீட்சை என்பது அவசியமற்ற ஒன்றாகும். இதை அரசு ரத்துச்செய்ய வேண்டும். இதற்கு பதிலாக அரசாங்கம் அரபு மதுரசாவில் அல்லது தனியாக அரபு மொழியில் சமயம் படிக்கும் மாணவர்களுக்கு அரபு மொழி மூலம் பொதுப்பரீட்சை வைத்து அதில் சித்தியடைவோருக்கு மட்டுமே " மௌலவி" பட்டம் அரசால் வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய நடைமுறை கொண்ட பதிவு பெற்ற மதுரசாக்களின் ஆசிரியர்களை அரசாங்கம் நியமிப்பதுடன் அரச சம்பளமும் வழங்கப்பட வேண்டும். முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் கோடிக்கனக்கான நிதி இருப்பதால் அதன் மூலம் சம்பளம் வழங்க முடியும்.
அஷ்ஷேக் மௌலவி முபாறக் முப்தி.
ஸ்ரீலங்கா ஜம்மிய்யத்துல் உலமா.
6.12.2023
0 comments :
Post a Comment