சாணக்கியனின் முயற்சியினால் PTA கைதிகள் நால்வருக்கு பிணை !



யங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் உட்பட 4 பேருக்கு நாளைய தினம் பிணை வழங்க ஏற்பாடு i

மாவீரர் தின நிகழ்வின்போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தரமாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்திய இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை நாளைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்க படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் இன்று 11 மணியாவில் அனுப்பிவைக்கப்பட்டுள்து.

சாணக்கியன் அவர்களால் விசேட விதமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை துரித கதியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :