அபிவிருத்தி ஊடான இராஜதந்திரத்தைக் கொண்டாடுதல்: USAID ஊடான 75 வருட மக்கள், பங்காண்மை மற்றும் முன்னேற்றத்தின் வரலாற்று நிகழ்வுகளை பதிவுசெய்யும் அமெரிக்கத் தூதரக காணொளி



கொழும்பு, டிசம்பர் 7, 2023 - அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக, குறிப்பிடத்தக்க ஒரு அபிவிருத்திப் பயணத்தின் வரலாற்றினை விவரிக்கும் வகையிலும் அப்பயணத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஆற்றிய முக்கிய பங்கினை வலியுறுத்தும் வகையிலும் ஒரு சிறப்புக் காணொளியினை வெளியிடுவதில் அமெரிக்கத் தூதரகம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. அது பேரழிவுகள் மற்றும் போருக்குப் பின்னர் மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவி செய்தல், ஜனநாயக ஆட்சியினை விருத்தி செய்வதற்கு உதவி செய்தல் அல்லது வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவி செய்தல் என எதுவாக இருந்தாலும், USAID பல தசாப்தங்களாக இலங்கைக்கு ஒரு உறுதியான நண்பராக இருந்து வருகிறது.

“எமது நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருடங்களை நாம் கொண்டாடுகையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல தசாப்த கால பங்காண்மையின் சாதனைகளை இந்த மனதைக் கவரும் காணொளி காட்சிப்படுத்துகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றில் USAID இன் பங்காண்மைகளூடாக எண்ணற்ற இலங்கையர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பகிரப்பட்ட சாதனைகளை இது எடுத்துக்காட்டுகிறது. எமது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் நாம் அடியெடுத்து வைக்கையில், இருநாட்டு மக்களுக்குமிடையிலான வலுவான உறவுகளையும், பங்காண்மைகளையும், மற்றும் முன்னேற்றத்தினையும் மேலும் பல ஆண்டுகளுக்குப் போஷித்து அமெரிக்க-இலங்கை நட்புறவானது தொடர்ந்து செழித்து வளரும்.” என இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கூறினார்.

“அமெரிக்க மக்களின் தாராளமான உதவிகளூடாக, 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை மக்களுடன் தொடர்ந்து பங்காளராக இணைந்து பணியாற்றுவதில் USAID பெருமையடைகிறது. இங்கு USAID இல் உள்ள -- இலங்கையர் மற்றும் அமெரிக்கர் எனும் நாம் ஒவ்வொருவரும் -- இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் வாழ்க்கையினை மேம்படுத்துவதற்கு உதவிசெய்வதற்கு உறுதிபூண்டுள்ளோம். USAID மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.” என இலங்கைக்கான USAID செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவ் தெரிவித்தார்.

அமெரிக்க-இலங்கை இராஜதந்திர உறவுகள் மற்றும் அபிவிருத்தி முன்முயற்சிகளுக்கான ஒரு சான்றான இக்காணொளியானது, எமது பகிரப்பட்ட பார்வை மற்றும் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை உருவகப்படுத்துகிறது. ஊடகங்கள் காணொளியின் உள்ளடக்கத்தை அணுகுவதற்கும் பகிர்வதற்கும் கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும்:


ஆங்கிலம்: https://youtu.be/abVYj0VILtY

சிங்கள உபதலைப்புகளுடன் ஆங்கிலம்: https://youtu.be/-6YJefJHrMU

தமிழ் உபதலைப்புகளுடன் ஆங்கிலம்: https://youtu.be/HIlu4rT2MXM

To download videos: Celebrating Diplomacy through Development - US Embassy Colombo/USAID


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :