நாவிதன்வெளியில் மு.கா.வின் 09 மகளிர் கிளைகள் புனரமைப்பு.!



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேசத்தில் 09 கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் கிளைகள் புனரமைப்புக் கூட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் என்.பி.நவாஸ் தலைமையில் இன்று (15) மத்திய முகாம் பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்த கிளைகள் புனரமைப்புக் கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ.காதர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் மாவட்ட செயற்குழுவின் செயலாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளருமான ஏ.சீ.நிஸார் ஹாஜியார் மற்றும் நாவிதன்வெளி பிரதேசத்தின் 09 சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழுக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :