எஸ்.ஆர்.ஆர்டிகல,
டபிள்யூ.டி.லக்ஷ்மன்,பி.பி.
ஜயசுந்தர மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரை பெயர் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி 2 மாதங்கள் கடந்துள்ள போதிலும்,இந்த பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக ஜனாதிபதியோ அல்லது தற்போதைய அரசாங்கமோ எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் பாராளுமன்றத்தில் கேள்வியை எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக,முன்னதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேள்வி எழுப்பிய போது, தனது பத்திரங்கள் அடங்கிய ஆவண கோப்புகளைப் பறித்து எடுத்தனர் என்றும்,
பாராளுமன்றத்தில் ஆளுந் தரப்பு அமைச்சர்கள் அமைதியின்றி நடந்து கொண்டனர் என்றும்,
எதிர்க்கட்சி போன்றே 220 இலட்சம் மக்களும் இந்த விடயத்தை அரசாங்கம் கையாளும் விதத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து,விசாரணைகளை மேற்கொண்டு,தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் ஏன் உத்தேசிக்கவில்லை என கேள்விய எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டை வங்குரோத்தடையச் செய்ததன் மூலம் குறித்த நபர்கள் தனிப்பட்ட நலன்களைப் பெற்றுள்ளார்களா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும்,இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பின்னர் அவர்களது குடியுரிமைகளை இரத்துச் செய்வதற்கான வாய்ப்புகள் கூட இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டு நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதைய நீதி அமைச்சர் கூட தெரிவித்துள்ளார் என்றும்,இந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் VAT வரியை அதிகரிக்க வேண்டிய ஏற்பட்டிருக்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
🟩நானோ உர மோசடியாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொருளாதாரத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சேதன உர மோசடி காரணமாக நாட்டுக்கு 711.8 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,அனுபவமற்ற இந்நிறுவனம் கொள்முதல் வழிகாட்டுதல்களை விதிமுறைகளைக் கூட மீறியுள்ளதாகவும்,விநியோகஸ்தருக்கு 711 மில்லியன் ரூபாவை அவ்வேளையிலயே பணமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு முன்னரோ அல்லது அங்கீகாரம் கிடைத்த அன்றோ உரங்களை விமானத்தில் ஏற்றி கொண்டு வரப்படுவது வழக்கத்திற்கு மாறான அதிசயமானதொரு விடயம் என்றும்,உரத் தொகையை பகுதி பகுதியாக இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டு இருந்தும்,மொத்த பங்குகளின் மதிப்புக்காக ஒரு கடன் பத்திரத்தை திறந்ததன் காரணமாக 99 இலட்சம் தேவையற்ற செலவுகளை அரசாங்கம் சுமக்க நேரிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩எரிவாயு மோசடியால் ஏற்பட்ட இழப்பு இதைவிடவும் அதிகமாகும்.
சியாம் கேஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க ஒப்புக்கொண்டாலும்,குறிப்பிட்ட நிறுவனத்தின் கோரிக்கையை அனுமதிக்காமல்,அதே நிபந்தனைகளின் கீழ் OKU டிரேடிங் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்ததால், 1138 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு ஒப்புக்கொண்ட 120 மில்லியன் அமெ.டொலர்கள் பயன்படுத்தப்படாமையால் நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டுக்கான மாற்றுத் தீர்வானது புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான பணப்புழக்க மதிப்பீடு அல்லது நிதி உறுதிப்படுத்தப்படாமல் எரிவாயு கப்பல்கள் வரவழைக்கப்பட்டதன் காரணமாக, 210 மில்லியன் ரூபா கப்பல் தாமத கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டையே வங்குரோத்தாக்கிய தரப்பு என பெயர்கள் கூட குறிப்பிடப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில்,எரிவாயு,நானோ உரம் போன்றவற்றிலும் ஏராளமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும்,பயன்படுத்தப்படாத நானோ உரங்களுக்குக் கூட பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
🟩நாட்டை வங்குரோத்தக்கியவர்களை ஏன் அரசாங்கத்தில் இருந்து நீக்க முடியாது?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக,முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு நட்டஈடு செலுத்த நேரிட்டுள்ளதாகவும்,
இதன் பிரகாரம்,நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர்ந்த தீர்ப்பின் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பெயரிடப்பட்ட நாட்டை வங்குரோத்தாக்கியவர்களை அரசாங்கத்தில் இருந்தும் மொட்டுக் கட்சியில் இருந்தும் நீக்குமாறும்,இதை நிறைவேற்றும் வரை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இவ்வாறு செய்யாமல்,நாட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும் பொறுப்பை 220 இலட்சம் மக்களுக்கு வழங்குவது தவறு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment