பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய 2024 ஆம் ஆண்டின் அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2024.01-01 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில், உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
உபவேந்தரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவின் அணிவகுப்பும் இடம்பெற்றது. பின்னர் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்களால் அரசாங்க சேவை சாத்தியப்பிரமாண உறுதிமொழி தமிழிலும் பதில் நிதியாளர் சீ.எம்.வன்னியாராச்சி அவர்களால் சிங்களத்திலும் வாசிக்கப்பட்ட அதேவேளை அனைத்து உத்தியோகத்தர்களும் குறித்த உறுதிமொழியைக் கூறி கடமைகளை பொறுப்பேற்றனர்.
நாட்டுக்காக உயிர் நீத்த முப்படடையினருக்காக இரண்டு நிமிட மௌனம் அனுஷ்ட்டிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், எங்களால் உறுதிகொள்ளப்பட்ட சாத்தியப்பிரமாணத்துக்கு அமைவாக எங்களது சேவையைப் பெறுவோர் பயனடைய வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் அனைவரும் தாங்கள் தங்களது கடமைகளை சரிவர ஆற்ற வேன்டும் என்றும் “வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மெய்ப்படுத்தி மக்கள் மையப் பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு வினைத்திறன்மிக்க மனித வளத்தினைக் கொண்ட அரச நிருவாகத்தின் பங்காளராகிய நாங்கள்,
அதி மேண்மைக்குரிய ஜனாதிபதி அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய யுக்திகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்கள் ஆற்றவேண்டிய பங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உச்ச அளவில் ஆற்ற அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின்போது பதில் நிதியாளர் சீ.எம்.வன்னியாராச்சி, நூலகர் எம்.எம்.றிபாயுடீன் பீடாதிபதிகள் பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் சிரேஷ்ட்ட கனிஷ்ட்ட விரிவுரையாளர்கள் நிருவாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
புதுவருட நிகழ்வின்போது உபவேந்தர் பதில் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மாணவர்கள் என பலரும் தங்களது புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
0 comments :
Post a Comment