புதிய ஆண்டின்(2024) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01)காலை 9.00 மணிக்கு கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
"வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" என்ற தொனிப் பொருளின் கீழ், தற்போதைய சர்வதேச போக்குக்கு அமைவாக புதிய பொருளாதாரச் செயன்முறையொன்றுக்கான அடிப்படையை வழங்கி ஜனாதிபதியால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு முன்வைக்கப்படுகின்ற விடயங்களின் வாயிலாக, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு, அரச சேவையிலுள்ள எங்கள் அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.
வரலாற்றில் முன்னொருபோதும் அனுபவித்திராத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவாறு முன்னோக்கிப் பயணிக்கும் இக்காலப் பகுதியில், உலகில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நாடுகள் அந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிமுகப்படுத்திய மறுசீரமைப்புக்கள் பற்றி ஆராய்ந்து, பொது மக்களுக்கான சேவை வழங்கலின் வினைத்திறன் உறுதிப்படுத்தப்படுகின்ற அத்தியவசியமான மறுசீரமைப்புக்களை அரச சேவையில் அறிமுகப்படுத்தி, அரச செலவுகளைக் குறைத்தல் மற்றும் அரச வருமானத்தை அதிகரித்தலின் மீது நீங்கள் அனைவரும் முன்னரை விடக் கவனம் செலுத்துதல் வேண்டும்.
மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ் அமீர் அலி,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம் ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் பழீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீlல், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல் ஜனூபா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்,உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கொண்டனர்.
0 comments :
Post a Comment