கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒன்றுகூடலும், இவ் வருடத்தில் அமுல் படுத்தப்படவுள்ள செயல் திட்டங்களை ஆராய்வு சம்பந்தமான செயலமர்வும் மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டின் ஹோட்டலில் (Green Garden Hotel ) மிகச் சிறப்பாக(29) நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந் நிிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் நிருவாக சபை, பொதுச்சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment