வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளச்சேனை பிரதேச செயலத்துக்குட்பட்ட 2800 குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே.அமீர் தலைமையில் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டு பலர் இப்பணியில் ஈடுபட்டு இந்த சமைத்த உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
குறிப்பாக, கட்சி பேதங்கள் பாராமல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment