ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு பெப்ரவரியில்



J.F.காமிலா பேகம்-
திர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி முதல் 22 வரை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மகாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. சுமார் 40 நாடுகள் இதில் பங்குபற்ற உள்ளன.

குறிக்கோளை அடைதல் மற்றும் அனைவருக்கும் துல்லியமான ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை அனுபவிக்கும் முகமாக போதியளவு தரத்தில் உயர்ந்த உணவுகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு பிரவேசத்தை ஏற்படுத்தும் நோக்கில் 130 உலக நாடுகளில் தனது பங்களிப்பை செய்து வருகின்ற ஐக்கிய நாடுகளின் உலக உணவு விவசாய அமைப்பின் 36-வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு பங்காளதேஷத்தின் டாக்கா நகரத்தில் நடைபெற்றது.குறித்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த சகல நாடுகளினதும் இணக்கத்துடன் 37-வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை 2024 ஆம் ஆண்டில் 40 நாடுகளின் பங்குபற்றலில் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி முதல் 22 வரை இம்மாநாடு நடைபெற உள்ளது.

2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இம்மாநாட்டில், இம்முறை நாட்டின்பல சிவில் சமூகங்கள் ஒன்றிணைத்து எம்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில், எவ்வாறு உணவுத்தட்டுப்பாட்டை முகம் கொடுப்பது என்பது பற்றிய ஆலோசனைகளை கலந்துரையாட உள்ளனர்.இதில் விவசாயம் பால்பண்ணை மீன்பிடி உணவு விரயத்தை எவ்வாறு குறைப்பது பற்றி ஆலோசனைகளை முன்வைக்க உள்ளனர்.

இது சம்ந்தமான ஊடக சந்திப்பொன்று கடந்த 11ம் திகதி கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த உலக மீனவர் சம்மேளன செயலாளர் திரு ஹேமன் குமார " எமது நாடு மந்த போஷனையில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.இது பாரதூரமாக விடயம்.இந்நெருக்கடியை எவ்வாறு நாம் வெல்வது?இதற்கான காரணங்கள் என்ன?மீனவர்களுக்கு கடல்வளம் குறைந்துள்ளது.நாட்டில் உள்ள சட்டங்களால் நமது கடல்வளங்களை சுரண்ட இடம் இடம் கொடுத்துள்ளனர்.60லட்சம் செலவழித்து கடலுக்கு செல்லும் படகுகளுக்கு கூட எந்த லாபமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மீனவர்களை கோட்டா முறையில் கட்டுப்படுத்தி,6000/-ரூபா முதல் 50லட்சம் வரை தண்டப்பணம் வசூலிப்பதால், மீனவர்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். உலக உணவு நிறுவனம் நிலையான அபிவிருத்தி பற்றி பேசுகிறது.ஆயினும் எமது நாட்டு மக்கள் புரத தட்டுபாட்டில் மந்த போஷனையில் கஷ்டப்படுகின்றனர்.

வீணாகும் உணவுகள் பற்றிய பெறுமதிகள் கணிப்பிடப்படுவதில்லை.கொழும்பில் மட்டும் 59% வீதமான குழந்தைகள் மந்த போஷனையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிவில் சமூகமாகிய நாம் இது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.அன்றாட உணவுத்தேவைக்காக நாம் போராட வேண்டி உள்ளது.இலங்கையை மீளக்கட்டி எழுப்ப நாம் பாடுபட வேண்டும்.இது பற்றி எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறும் மாநாட்டில் சிவில் சமூகங்கள் தமது ஆலோசனைகளை வழங்க உள்ளனர் " என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பல சிவில் சமுக அமைப்புகள், தமது கருத்துக்களையும் இங்கு முன்வைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :