இலங்கையில் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட CCBO நிகழ்ச்சித்திட்டமானது, சமுத்திர பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான USAID இன் உலகளாவிய முதன்மைத் திட்டமாகும். இலங்கையை பொறுத்த வரையில், மதிப்பீட்டளவில் 20 சதவீதமான வீடுகளே பொதுக் கழிவு சேகரிப்பு சேவைகளுக்கான அணுகலை கொண்டிருக்கும் நிலையில், கழிவு முகாமைத்துவ கட்டமைப்புகள் செயற்பாட்டுத் திறனை தக்கவைத்துக் கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளமையால், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கான கேள்வி அதிகரிதுள்ளது. மக்கள் செறிந்து வாழும் தீவு நாடு என்ற வகையில், இலங்கையானது அதன் திண்ம கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது.
மொத்தமாக 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான (382.8 மில்லியன் ரூபா) தொழில்நுட்ப உதவிகள் மற்றும் கடனற்ற நிதியுதவிகளை வழங்கி கழிவு பயன்பாடு மதிப்பீடு சங்கிலியில் (waste value chain) ஒவ்வொரு படிமுறையையும் நிவர்த்தி செய்வதற்கான புத்தாக்க, பொருளாதார ரீதியாக சாத்தியமான, மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய தீர்வுகளை வடிவமைப்பதற்கும் பரீட்சார்த்தம் செய்வதற்கும் CCBO ஊடாக அமெரிக்கா உள்நாட்டு அமைப்புகளுடன் பங்காண்மையை கொண்டுள்ளது. இந்த பங்காண்மைகளின் விளைவாக, மேம்படுத்தப்பட்ட திண்ம கழிவு சேவைகளில் இருந்து மேலதிகமாக 625,000 இலங்கையர்கள் பயனடைந்துள்ளதுடன், மீள்பாவனையை அதிகரிக்கும் மற்றும் கழிவுப் பொருட்களை புதிய பொருட்களாக மாற்றுவதை ஊக்குவிக்கும் நிலைபேண்தகு செயன்முறைகளை கொழும்பு, காலி, மற்றும் யாழ்ப்பாண பிராந்தியங்களிலுள்ள சமூகங்கள் கடைப்பிடித்துள்ளன.
"காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கும் மீளெழுச்சி திறனை கட்டியெழுப்புவதற்கும் தமது இயற்கை வளங்களின் முகாமைத்துவத்தை இலங்கை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவுகிறது," என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான USAID இன் பொருளாதார வளர்ச்சி பிரதி பணிப்பாளர் டெனிஸ் வெஸ்னர் தெரிவித்தார். "CCBO நிறைவடைகின்ற போதும் கூட, எமது பணி முடிவடையாது. உள்நாட்டில் சாத்தியமான தீர்வுகளை காண்பதற்கும் சமுத்திரத்திலான பிளாஸ்டிக்குகளை குறைப்பதற்கும் இலங்கை பங்குதாரர்களுடன் அமெரிக்கா தொடர்ந்தும் ஒன்றிணைந்து பணியாற்றும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
"சமுத்திரங்களிலான பிளாஸ்டிக்குகளை குறைப்பதற்கு நிலையான தீர்வுகளை உருவாக்கிய தூய நகரங்கள், நீல சமுத்திர இலங்கை நிகழ்ச்சித்திட்டத்தின் கூட்டு முயற்சிகளை நாம் கொண்டாடுகிறோம். சமுத்திரத்திலான பிளாஸ்டிக் மாசுபாடு நெருக்கடி அதிகரிப்பபை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்ற வகையில், CCBO ஆனது நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புக்கான தமது உறுதிப்பாட்டின் முன்னேற்றத்தில் முன்மாதியான பங்குதாரராக இருந்து வருகிறது. இந்த முன்னெடுப்பானது, எமது பிரஜைகளுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான நகரங்களை உருவாக்குவது தொடர்பிலான தந்திரோபாய பங்காண்மைகள் மற்றும் சமூக ஈடுபாடுகளின் நேர்மறையான தாக்கங்களை வெளிப்படுத்தி சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கான எமது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது," என்று சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
சமுத்திரங்களிலான பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கான மிப்பெரிய மூலாதாரமொன்றாக இருக்கும் நாடுகளின் துரிதமாக நகரமயமாகும் பிரதேசங்களை இலக்கு வைப்பதன் மூலம் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் சமுத்திரத்திற்குள் பிரவேசிக்கும் ஏறக்குறைய 11 மில்லியன் மெற்றிக் தொன் பிளாஸ்டிக்குகளை குறைப்பது உலகளாவிய ரீதியில் CCBO இன் இலக்காக இருக்கிறது.
தூய நகரங்கள், நீல சமுத்திர இலங்கை நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதன் தாக்கங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள www.urban-links.org/ccbo எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்கவும்.
0 comments :
Post a Comment