அக்ரம் பௌண்டேசனின் 750க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள்!



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கடந்த 31 வருடங்களாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அக்ரம் அவர்களது அக்ரம் பௌண்டேசனிலால் பாடசாலை மாணவர்களது கல்வியை மேம்படுத்துவதற்காக அக்ரம் செய்து வரும் சேவையை நாம் பாராட்டுகின்றோம். என முன்னாள் அமைச்சரும் கொழும்பு ஜ.தே.கட்சி அமைப்பாளருமான ரவி கருநாயக்க தெரிவித்தார்

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அக்ரம் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு வாழ் வருமானம் குறைந்த குடும்பங்களது 750க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன் இதில் மூவினங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளுகளும் அடங்குகின்றனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை 27 மாளிகாவத்தையில் உள்ள பிரதிபா மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது . இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜல மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களும் ,பெற்றோர்களும் அக்ரம் பௌன்டேசனின் மகளிர் குழுவும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவி கருநாயக்க

கடந்த ஆட்சிக் காலத்தில் நான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு டெப் கனனி வழங்குவதற்காக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிகரசிங்க அவர்களால் நடவடிக்கை எடுத்து அதற்கான நிதியும் ஒதுக்கியபோது அதனை நல்லாட்சியில் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி அவர்கள் அதமை தடுத்துவிட்டார்கள். அதன்பின்னர் கொவிட் காலத்தில் அம் மாணவர்கள் சூம் முறையில் கனனி ஊடாக கற்பதற்கு கனனியின்றி பாடசாலை மாணவர்கள் மிகவும் சிறமப் பட்டார்கள்

கடந்த 31 வருட காலமாக அக்ரம் அவர்கள் இவ்வாறாக அவரது பௌண்டேசன் அமைத்து கொழும்பு வாழ் குறைந்த வருமானம் குடும்பங்களை இனம் கண்டு இப்பிரதேச மாணவர்களது கல்வியை உயர்த்துவதற்காக சேவை செய்து வருகின்றார் அவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் தொடா்ச்சியாக அவரிடமிருந்து புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் இங்கு கல்வியில் திறமையாக தேர்ச்சி பெற்று சிறந்து விளங்குவதாகவும் இம் மேடையில் உரையாற்றினார்கள்
.
கடந்த காலத்தில் இந்த நாடு பொருளாதாரத்தில் சீர்கெட்டு இருந்ததை இந்த நாட்டின் ஆட்சியை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அந்த நிலையில் இருந்து மாற்றி இலங்கையின் சாதாரண நிலைமைக்கு மாற்றியமைத்தார்கள் அவரிடம் சிறந்த தலைமைத்துவம் சிறந்த கொள்கையும் உள்ளது எனவும் அங்கு முன்னாள் அமைச்சர் ரவிகருநாயக்க உரையாற்றினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :