கல்முனை றொட்டரிக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 917 பயனாளிகளுக்குரிய மூக்குக் கண்ணாடிகளை கல்முனை ஆதார வைத்தியசாலையில் வழங்கி வைத்தது.
கல்முனை ஆதார வைத்தியசாலை கேடபோர் கூடத்தில் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண் சிகிச்சை முகாமின்போது இக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
Global Hand Charity என்னும் அவுஸ்ரேலிய அமைப்பின் அனுசரணையுடன், றொட்டரிக்கழகம் Bill Point, அவுஸ்ரேலியா,றொட்டரிக்கழகம் கொழும்பு என்பவற்றின் பங்களிப்புடனும் இவ்வேலைத்திட்டம் கல்முனை றொட்டரிக்கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வானது 15 அவுஸ்ரேலிய கண் வைத்திய நிபுணர்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவும் இணைந்து
நடாத்தப்பட்டது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு வைத்தியசாலைப்பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கண்வைத்திய நிபுணர் டாக்டர் என்.நிரோசன்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ ஜே அதிசயராஜ் அவுஸ்ரேலிய குழுவினர் தலைவர் ஜோன் மான்fவீல்ட் உடபட ஏனைய அங்கத்தவர்களும், கல்முனை றொட்டரிக்கழக தலைவர் லயன் ஏ எல் ஏ நாசர் மற்றும் அங்கத்தவர்களும், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர், தாதியர்கள் உட்பட ஏனைய சில உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.
இச்சிகிச்சையின் போது 197 கற்றறக் (Cataract) நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களுக்கான வில்லைகள் ( lenses) கிடைத்ததும் கண் அறுவகைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் கல்முனை றொட்டரிக்கழகத்தினாலல் மேற்கொள்ளப்படும்.
இவ்வேலைத்திட்டம் கடந்த ஆறு மாதங்களாக சமூக சேவைப்பணிப்பாளர் மு சிவபாதசுந்தரத்தின் வழிகாட்டலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment