அன்பின் இல்லம் தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வசிக்கும் செல்வரூபன் அபிவானன் என்பவரின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை பாலையூற்று அன்னாஸ் மண்டபத்தில் (12) இடம் பெற்றது.
திருகோணமலையில் மாவட்டத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இலவச கொப்பிகளை திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சமன்கே ஜெயரட்ன வழங்கி வைத்தார்.
நூறு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப் பட்டன.
இந்நிகழவில் சி.ஐ.ஜெயரட்ன,பி,சி.ஜவாஹிர்,ரோசல்டா மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment