அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்தியத்தில் மகத்தான மருத்துவ சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை ஆதார வைத்தியசாலை கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களுக்காக வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலை வெளியிடப்பட்ட சிகிச்சைகளின் புள்ளி விபரங்களின் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
சேவைகள் வருமாறு..
வைத்தியசாலையின் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிகள் (Inward Admission) - 37620, வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் (OPD Admissions) - 147079, சாய்சாலை நோயாளர் (Clinic Patients) - 112831, வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திர சிகிச்சைகள் (General Surgeries) - 3804, பாரிசவாத சிகிச்சைகள் (Stroke Patients) - 331, கண் சத்திர சிகிச்சைகள் (Eye Surgeries) - 2603, CT ஸ்கேன் சேவை எண்ணிக்கை - 5544, ஆய்வுகூட பரிசோதனைகள் - 540000 மற்றும் இதர மருத்துவ சேவைகளாக ECG, Daycare Surgeries, இயன் மருத்துவ சேவை (Physiotherapy), நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் (Patient Safety and Health Information Desk/ Relax), X - Ray, USS போன்றவற்றின் மூலம் கிட்டத்தட்ட 111216 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2023 ஆம் ஆண்டு மாத்திரம் 372 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ் வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய மக்கள் மட்டுமன்றி ஏனைய வெளி பிராந்தியங்களில் இருந்து வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
0 comments :
Post a Comment