அடைமழை காரணமாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி அணைக்கட்டுகள் எல்லாம் திறக்கப்பட்டமையால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்தித்து வரும் இவ்வேளையில் அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனையொட்டியதாக கிழக்கின் கேடயம் மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைசேனை போன்ற பிரதேசங்களுக்கான நிவாரணப் பணியை முன்னெடுத்தது.
கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் " அயலவருக்கு உதவுவோம்" செயற்திட்டத்தினூடாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஆரம்பித்த நாள் முதல் இந்த நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அம்பாறை- கல்முனை வீதியில் அபாயகரமான முறையில் வெள்ள நீர் வழிந்தோடி கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் கிழக்கின் கேடயம் அமைப்பினர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கான நிவாரணப் பணியை மூன்று அடிக்கு மேற்பட்ட வெள்ளத்தில் மிதந்தவாறு முன்னெடுத்தனர்.
அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள இடைத்தங்கல் முகாம் மற்றும் வீடுகளிலும் இந்த நிவாரணப் பணியை கிழக்கின் கேடயம் முன்னெடுத்தது.
0 comments :
Post a Comment