சம்மாந்துறையிலும் இரண்டு முகாம்கள் ; பிரதேச செயலாளர் நேரடி களத்தில்



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேசத்தில் இரண்டு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களின் குடியிருப்பு நிலங்களுக்குள் நீர் உட்புகுந்துள்ளது.அதை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழு ஒத்துழைப்போடு மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மல்கம்பிட்டி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள நெய்னாகாட்டு கிராமத்தில் சுமார் தற்பொழுது வரை 19 குடும்பங்களில் உள்ள 77 உறுப்பினர்கள் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள மல்வத்தை பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் சம்மாந்துறை மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலத்தில் சுமார் தற்பொழுது வரை 90குடும்பங்களில் உள்ள 292 உறுப்பினர்கள் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டதோடு மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு மக்களுக்குரிய ஆலோசனைகளும் வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :