நிந்தவூர் பிரதேசத்தில் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளதால் மக்களின் நாளாந்த இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழமையாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் செல்லும் பிரதானவடிகானினூடாக வடிந்து செல்லும் வெள்ள நீர் கடலில் சேர்வது வழமையான ஒன்றாகும்.
பொது மக்கள் சிலரின் ஆய்ந்தோய்ந்து பாராத செயற்பாடுகளினால் வடிகான்களுக்குள் வீட்டுக்கழிவுகள்,விலங்கு கழிவுகள், கண்ணாடி மற்றும் போத்தல் ஓடுகள், திண்மக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகளை இடுவதனால் வடிகான்கள் அடைத்து வெள்ளநீர் வடிந்து செல்லாமையே இவ்வாறு தாழ் நிலங்களில் வெள்ளநீர் நிற்பதற்கான பிரதான காரணமாகும்.
நிந்தவூர் பிரதேச மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் பயனாக வேலைப்பகுதி மேற்பார்வையாளர் ஏ.எஸ்.நிஸாட் பிரதேச சபை ஊழியர்கள் மூலமாக வடிகான்களை துப்பரவு செய்யும் நடவடிகையினை துரிதப்படுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment