அன்றாடம் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை கடத்தும் மற்றுமொரு கூட்டம் தான் மீனவ சமூகம்.அன்றைய தினம் தமக்கு சரியாக மீன் படவில்லையென்றால் அந்த குடும்பத்தின் நிலை அவ்வளவுதான்.கடலையும் களப்பையும் ஆற்றையும் நம்பி இவர்கள் வாழ்வு சுழன்று கொண்டிருக்கின்றது.
கடல் கொந்தளிப்பு, வேகமான காற்று, விடாத அடைமழை, உக்கிரமான வெள்ளம் என்பன மீனவர்களுக்கு எதிரியாக தென்படும் போதெல்லாம் இவற்றையும் சவாலாக ஏற்று மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்தவர்களும் காணாமல் போனோரும் பலர்.
காற்று, குளிர், கடும் வெயில் தாண்டி தமது முயற்சி வெற்றி பெற்றால் அன்றைய தினம் மீனவர்கள் படும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.
கடலுக்கு படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கரைக்கு திரும்பி வருவார்கள் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. அடிப்படை
வசதிகள் எதுவுமன்றி குடிசைகளில் மனைவி மக்களுடன் மிகவும் கஸ்டமான வாழ்க்கைக்கு உள்ளாகியுள்ள இம் மீனவ சமூகம் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பல உயிர்களை கடலுக்கு இரையாக்கி ,உடமைகள் இருப்பிடங்களை இழந்து நின்ற போது அவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட சர்வதேச தன்னார்வு நிறுவனங்கள் முன்வந்தன.
இதுவொரு பாராட்டத்தக்க விடயமாக இருந்தாலும் தாம் புரியும் தொழிலுக்கு சம்பந்தமில்லாத இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளதால் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னேடுத்துச் செல்வதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
தாம் பிடிக்கும் மீன்களின் விலை அதிகரிக்கும் போது மகிழ்வுறும் இச் சமூகம் மீனின் விலை குறையும் போது மனதை தளரவிடுவதில்லை .இது தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழியின்றி முன்னோக்கியே செல்கின்றனர்.
உலகம் நவீன தொழில்நுட்ப துறையில் எவ்வளவு வேகமாக நகர்ந்தாலும் கிழக்கு மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவோ, மீனவர்களின் பிள்ளைகளுக்கு அத் துறையில் எதிர்காலத்தை உருவாக்க எந்தவிதமான முன் ஏற்பாடுகள் எதுவுமில்லாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.
0 comments :
Post a Comment