காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுஹதா வித்தியாலயத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பாடசாலையை முழுமையாக பார்வையிட்டார்
இதன் போது தோணா கால்வாய் மற்றும் வெள்ள நீர் ஏறிய சில வீடுகளையும் அரசு அதிபர் பார்வையிட்டார்
இதன் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான முபீன் மற்றும் பரீத் , முன்னாள் நகர சபை உறுப்பினர் பாக்கீர் சமூக செயற்பாட்டாளர் மீராசாஹிப். பாடசாலை அதிபர் முனீர் உட்பட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோரும் வருகை தந்தனர்
தோனாக் கால்வாயினூடாக வெள்ள நீர் வடிந்து ஓடக் கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான முபீன் மற்றும் பரீட் ஆகியோய் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
0 comments :
Post a Comment