தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவத்தினால் நடாத்தப்பட்ட 150 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு ( 31) சாய்ந்தமருது கலாசார நிலைய மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் (கலாநிதி) ரமீஸ் அபூபக்கர், கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிதி உதவியாளர் எம்.எஸ்.எம். றியாஸ், விஷேட அதிதிகளாக தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவத்தின் சிங்கள மொழிக் கற்கை நெறிக்கான வளவாளரும் திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்
பி. சந்திரகுமாரி, தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவத்தின் சிங்கள மொழிக் கற்கை நெறிக்கான வளவாளர், மொழிபெயர்ப்பாளர், கல்முனை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.பி. ஆமினா
ஆகியோர் கலந்து கொண்டனர்.
18 நாட்களாக இடம்பெற்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களினால் சிங்கள மொழியினை அடிப்படையாக கொண்ட கலை கலாசார மேடை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
0 comments :
Post a Comment