சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி. சி.குமுதினி என்பவர், மருத்துவம் தொடர்பான பல நூல்களை கொள்வனவு செய்துவிட்டு அதற்குரிய பணத்தினை வழங்காமல் கடந்த இரு வருடங்களாக ஏமாற்றி வருகிறார் என்ற, குற்றத்தின் பேரில் அவருக்கெதிராக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று இன்று (17) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் மருத்துவ விளக்கங்கள் அடங்கிய நூல்கள் தனக்குத் தேவைப்படுவதாகவும், அந்த நூலின் பிரதியொன்றை முதலில் தருமாறும், அதைப் பார்த்துவிட்டு இன்னும் பல நூல்களை கொள்வனவு செய்யப்போவதாக சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி. சி.குமுதினி என்பவர் அலைபேசி ஊடாக, நூல் தொகுப்பாசிரியரிடம் கோரியதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூலின் பிரதியொன்றை கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுள்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் சித்த வைத்தியர் போல்ட்ரன் ரஜீவிடம் வழங்கி வைக்குமாறும், அது தன்னிடம் கிடைக்குமெனவும் அவர் கேட்டுக்கொண்டதற்கமைவாக, அவரிடம் வழங்கி வைக்கப்பட்டதென்றும் அம்முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நூலை பெற்றுச்சென்ற சித்த வைத்தியர் போல்ட்ரன் ரஜீவ் என்பவர் அந்நூலை வழங்கியதாகவும், அதைப் பெற்றுக் கொண்ட சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி. சி.குமுதினி என்பவர், நூல் கிடைத்து விட்டதென்றும், இருவரும் நூலின் தொகுப்பாசிரியரிடம் அலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்கள்.
பின்னர், சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி. சி.குமுதினி தொகுப்பாசிரியரை இரவு பகலாக அலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, தனக்கு இன்னும் பல நூல்கள் தேவைப்படுவதாகவும், அந்நூல்களை சித்த மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்போவதாக்கூறி, ஒரு தொகுதி நூல்களை தொகுப்பாசிரியரிடம் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தினை பின்னர் தருவதாகவும் கூறியுள்ளார்.
தொகுப்பாசிரியரினால் நூலுக்குரிய பணத்தை கேட்கின்ற போதெல்லாம் தருகிறேன், தருகிறேன் என்று கடந்த இரு வருடங்களுக்கு மேலாக அப்பணத்தை வழங்காமல் மட்டக்களப்பு - பேத்தாளை ஆயுள்வேத மத்திய மருந்தகத்திலிருந்து யாழ். மாவட்ட கரவெட்டி கிராமிய சித்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்று விட்டார் என்றும் அம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றம் பெற்றுச்சென்ற அவர், நூலுக்குரிய பணத்தை வழங்காமலும், தொகுப்பாசிரியரினால் அலைபேசி அழைப்பு ஏற்படுத்துகின்ற போதெல்லாம் அந்த அழைப்புகளை ஏற்காமலும், வட்சப் செய்திகளுக்கு எவ்வித பதில்களும் வழங்காமலும் ஒழித்து வருகின்றார் என்று கூறியே நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் அம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment