விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றை இன்று முதல் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 70 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான வேலைத்திட்டம் கல்முனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹிலா இஸ்ஸதீன் பணிப்புரைக்கு அமைவாக தொற்று நோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம் பசாலின் நேரடி கண்காணிப்புடன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தலைமையில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் கல்முனை பிரதேசத்தில் இன்று(07) நடைபெற்றது.
நிலைபேறான ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கமும், சுகாதாரத் திணைக்களமும் பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு செயற்பாடாக இந்த டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகவுள்ள தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை அலுவலர் பிரிவுகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இந்த நடவடிக்கை ஒரு கூட்டு நடவடிக்கையாகவே செயற்படுத்தப்படுகின்றது.
0 comments :
Post a Comment