திடீர் அனர்த்தம் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளின் போது மனங்கோணாமல் தமது தொழிலை மேற்கொள்ளும் ஒரு சுமூகமாகத் செயற்படும் நகர சுத்திகரிப்பாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள், நகரசபைகள் மற்றும் மாநகர சபைகளினால் தினசரி இம்மாவட்டத்தில் சேரும் திண்மக் கழிவுகளை அவ்வப்போது அகற்றுவதில் இரவு பகல் பாராது சேவையாற்றுகின்ற நகர சுத்திகரிப்பாளர்கள் ஒரு நாளைக்கு லீவு எடுத்தால் சுற்று சூழல் சுகாதார நிலமைக்கு என்னாகும். துர்நாற்றம் தாங்க முடியாமல் பிரதேசமெங்கும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலமை உருவாகும்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமையிலும் திண்ம கழிவகற்றலில் நகர சுத்திகரிப்பாளர்கள் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
0 comments :
Post a Comment