கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த புதுவருட வரவேற்பு நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ரசாங்கத்தின் நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2024ம் ஆண்டின் கடமை செயற்பாட்டினை ஆரம்பிக்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இன்று (01.01.2024) திங்கள் கிழமை சுப நேரம் காலை 09.00 மணிக்கு ஆரம்பமானது.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த புதிய ஆண்டினை வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்; தலைமையில் இடம் பெற்றது.

தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் வகையில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்தப்பட்டதுடன் நடைமுறை ஆண்டிற்கான கடமை சபதமும் நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வரி விதிப்பின் நோக்கமும் அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பும் என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலினால் கருத்துரை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி. றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கணக்காளர் ஏ.மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.தாஹிர்;, சமுர்த்தி தலைமைய முகாமையாளர் எஸ்.ஏ.பஷீர், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமைய முகாமையாளர் எஸ்.ஏ.பஸீர், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஐயூப்கான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்ளான ஏ.சி. சாசிதிக்கீன், சி.எம்.எஸ். இஸ்மாயில் ஆகியோருக்கு மாவட்டத்தில் சமுர்த்தி செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்டமைக்கான நற்சான்றிதழ் பத்திரம் பிரதேச செயலாளரினாலும் மற்றும் உயர் அதிகாரிகளாலும் வழங்கி வைக்கப்பட்டது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :