தி/ கிண்ணியா அல் அக்ஸா தேசிய கல்லூரியின் பிரதி அதிபராக திருமதி பி.எம்.எஸ்.ஹுஸைனா முஜீப் தனது கடமை பொறுப்புக்களை (17) புதன் கிழமை ஏற்றுக் கொண்டார்.
அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தி யடைந்த இவர்,ஓய்வு பெற்ற அதிபர் பீர் முகமது என்பவரின் கனிஷ்ட புதல்வியும், ஏ .டபுள்யூ எம்.முஜீப் அதிபரின் பாரியாரும், கிண்ணியாவின் முதல் (CEO) முன்னாள் வட்டார கல்வி அதிகாரி இஷாக் சேரின் பேத்தியும், பொருளியல் விசேட துறை பட்ட தாரியும், பட்டப் பின் கல்வி டிப்ளோமோ என்பனவற்றை பூர்த்தி செய்ததுடன். இறுதியாக தி/கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பொருளியல் பாட சிரேஷ்ட ஆசிரியராக கடமையாற்றியவராவார்.
அல் அக்ஸா கல்லூரியின் ஆளணிக்கு ஏற்ப இரண்டு உதவி அதிபர்கள் மற்றும் ஒரு பிரதி அதிபர் ஆகிய வெற்றிடங்களில் , பிரதி அதிபர் பதவியை நிரப்பும் பொருட்டு பிரதி அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment