வட கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் யாசகர்களின் தொகை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பல விதமான இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி சிறியோர் முதல் வயோதிபர்கள் வரை யாசகம் கேட்கும் இலகுவான தொழிலுக்கு உள்ளாகி வருகின்றனர்
நகரிலுள்ள வங்கிகள்,அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், புகையிரத நிலையங்கள், சந்தைகள் ஆகியவற்றிற்கு முன்னாலும்,பயணிக்கும் பஸ்களிலும் சிறு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு பயணிகள் நெருக்கத்தின் மத்தியில் யாசகம் கேட்பதும் இதுதவிர மிகவும் சகிக்க முடியாத நிலமையொன்றை உண்டு பண்ணுகின்றது.
பேராதனை பல்கலைக்கழக பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு பேராசிரியர் வசந்த அத்துக்கோரல கதிர்காமம் பிரதேசத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் சாதாரணமாக ஒரு யாசகர் தினசரி 4000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை சம்பாதித்துக் கொள்வதாக அறிக்கைகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment