வெள்ளப்பாதிப்பு மக்களுக்கு ஒஸ்காரின் உலருணவு !



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு பிரதேசத்தில் மிகவும் தாழ்நிலை பகுதியான பிரிவு 11 இல் வசிக்கும் வெள்ளப்பாதிப்பு மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பு (அவுஸ்திரேலியா - காரைதீவு மக்கள் ஒன்றியம்- AusKar) நேற்று முன்தினம்(20) சனிக்கிழமை 300 தொகுதி உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் முன்னிலையில் இப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒஸ்கார் சார்பில் சமூக செயற்பாட்டாளர் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கலந்துகொண்டு அதனை வழங்கி வைத்தார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு சமூக ஆர்வலர்களின் நிதி உதவியைக்கொண்டு காரைதீவு இளைஞர்கள் அந்த மனிதாபிமான பணியில் ஈடுபட்டார்கள்.
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த குளவெளி மக்களுக்கு சமைத்த உணவை ஒஸ்கார் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள அகதிகளுக்கு உலருணவை தொடர்ந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது என்று ஒஸ்கார் கூறுகிறது.




















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :