காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்திற்கு "அஸ்கோ" அமைப்பினர் ஒரு தொகுதி ஹொக்கித்தடியினை வழங்கி வைத்தனர்.
கழகத்தின் தலைவர் தவராசா லவன் தலைமையில் கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் இடம்பெற்ற வேளையில் மேற்படி தடிகள் வழங்கி வைக்கப்பட்டன .
காரைதீவு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அந்த நிகழ்வில் அதிதிகளாக கழக போசகர் வி.ரி. சகாதேவராஜா அமைப்பின் செயலாளர் ச. நந்தகுமார் பொருளாளர் ம. சுந்தரராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கடந்த வருடம் மாகாண மட்டத்தில் சாதனை நிலைநாட்டியதற்கான சான்றிதழ்கள் கழக வீரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment