வேனும் உழவு இயந்திரமும் நேற்று (27) சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பொது நூலகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் செங்கற்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் வேனுடன் மோதி உழவு இயந்திரம் ஓட்டமாவடி பொது நூலக மதிலை உடைத்துக் கொண்டு நூலக வளாகத்தில் புகுந்துள்ளது.
இவ் விபத்தில் உழவு இயந்திர சாரதி படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடாமாற்றப்பட்டுள்ளார்.
இதில், பொது நூலக மதில் மற்றும் வடிகான் ஆகியவை சேதமடைந்துள்ளன.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment