மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா : அரசாங்க அதிபர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு !



நூருல் ஹுதா உமர்-
லாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா 2023 மற்றும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் விழா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். ரிம்ஸான் அவர்களின் நெறிப்படுத்தலில் அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் அட்டாளைச்சேனை தனியார் மண்டபத்தில் இன்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட நீதவான் கெளரவ எம்.எச்.எம். ஹம்ஸா, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ டி.கருணாகரன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம். அன்ஸார், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, அம்பாறை மாவட்ட உதவி செயலாளர் டவலியு.வி. செனவிரத்ன, கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ், பிரதேச செயலகங்களின் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், சிரேஷ்ட கலைஞர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ், முஸ்லிம் மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகள் எல்லோரையும் கவரும் வகையில் இங்கு அரங்கேற்றப்பட்டதோடு, அம்பாறை மாவட்டத்தில் கலாச்சார நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் சுவதம் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :