கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை அடிப்படையாகக் கொண்டு பல்லின சமய கலாசார நிகழ்வுகளை மாணவர்களின் மத்தியில் அறிமுகப் படுத்தும் எண்ணக்கருவிற்கமைவாக பாடசாலையின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவினால் பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற நல்லிணக்க பரஸ்பர உறவுகளைப் பேணும் இத்திட்டத்தில் பாடசாலைமாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டதோடு, இதன் மூலம் மாணவர்களுக்கு மத்தியில் பல்லின சமய கலை, கலாசார பண்புகள் தொடர்பான மனப்பதிவுகளை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, தமிழர் பண்பாடுகள் தொடர்பான சிறப்பம்சங்களை உணர்த்தமுடிந்தமை இந்நிகழ்வின் வொற்றியாகக் கருத முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment