"மனுசக்தி" எனும் தொனிபொருளின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான கிளை நிலையம் திறந்து வைப்பு



க.கிஷாந்தன்-
"மனுசக்தி" எனும் தொனிபொருளின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான கிளை நிலையம் ஒன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் (07.01.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கலந்துக்கொண்டு பணியகத்தை சமய அனுஸ்டானங்களுடன் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்து பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பணிப்பாளர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சென்ற வருடம் டிசம்பர் மாதம் நுவரெலியாவில் இடம்பெற்ற புலம்பெயந்தோர் தினத்தையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் மாணவர் ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இந்த பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் வெளிநாட்டு சந்தைகளுக்கு திறன்மிக்க மனிதவளத்தை வழங்குவதில் உலகின் சிறந்த தெரிவாக இலங்கையை உருவாக்குவது எனும் நோக்கினை கொண்டும்,

தேசிய பொருளாதாரத்திற்கு பங்காற்றுவதுடன், சகலரினதும் உரிமை நலனை பேணி, பொதுமக்களுக்கு தமது திறன்களை கொண்டு வெளிநாட்டு சந்தைகளில் நன்மையான பயன்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வினைத்திறன்மிக்க நியாயமான வழிமுறைகளை உருவாக்குவதை சேவையாக கொண்டும் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் நுவரெலியா வாழ் மக்கள் கண்டி, கொழும்பு என அலைந்து சிறமப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளை பெற்று வந்தனர். இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒர் அங்கீகாரம் வழங்கப்பட்டு நுவரெலியாவில் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிளை பணிமனை ஆரம்பித்துள்ளமை வரவேற்க்கத்தக்க ஒன்றாகும்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனவரி மாதம் இறுதிக்குள் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் உயர்வுக்கு தீர்வு கிட்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நாட்டுக்கு பொருளாதார வளர்ச்சிக்குபெரும் பங்காற்றிவரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களை என்னால் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.

அந்தவகையில் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தனது உரையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

இவரின் வேண்டுகோள் இம்மாத இறுதிக்குள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது. என தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி திகதி குறித்துள்ளார்.தன்னை அழைத்து பேசியும் உள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பாக சகல தரப்புகளும் கலந்துரையாடவுள்ளதுடன், பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆகையால் இம்மாத இறுதிக்குள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிடைக்கும் இதை இந்த நாட்டு மக்களை காத்து வரும் ஜனாதிபதியே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்துவார் என அமைச்சர் தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :